நங்கூரபிடப்பட்டிருந்த படகு கரை ஒதுக்கம்

மட்டக்களப்பு காத்தான்குடிபொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு காரணமாக நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த பாரிய விசைப்படகு நேற்று (23) மாலை கடுமையான காற்றினால் அடித்து வரப்பட்டு கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது
நீண்ட நாட்கள் நடுக்கடலில் தங்கி இருந்து மீன்பிடிக்கின்ற அலியா படகு எனப்படுகின்ற பாரிய படகு இவ்வாறு கொந்தளிப்பு காரணமாக கரைக்கு அடித்து வரப்பட்டுள்ளது
நங்கூரமிடப்பட்டிருந்த குறித்த படகு கடைக்கு இழுத்து வரப்பட்டுள்ள நிலையிலும் அவற்றை கரையோரமாக இழுத்து கரை சேர்ப்பதில் மீனவர்கள் பெரும் சிரத்தைகளை எதிர்கொண்டுள்ளனர்.
பெரிய எண்ணிக்கையிலான மீனவர்கள் ஒன்று திரண்டு மேற்படி பாரிய படகினை கரைக்கு இழுத்து வருவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
தற்போது மாவட்டத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது
கிருஷ்ணகுமார்
