பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் கைப்பற்று

Date:

கிருஷ்ணகுமார்

மட்டக்களப்பு கொட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பிரதேச வாலியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையத்தை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் முற்றுகையிட்டதுடன் அங்கிருந்து பெருமளவான கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கான மூலப்பொருட்களை இன்று (28) மாலை கைப்பற்றியுள்ளனர்.

இச்சுற்றி வளைப்பு தேடுதலின் போது 23 பரள்களில் சுமார் 14 லட்சத்து 50 ஆயிரம் மில்லி லிட்டர் கோடா மற்றும் 750 போத்தல்களில் 5,25,000 மில்லி லிட்டர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர் பயணித்த தோனியும் போலீசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி ஐ பி தெலங்கா வலகே தலைமையிலான போலீஸ் குழுவினர் மேற்படி சுற்றி வளைப்பை மேற்கொண்டிருந்தனர்

சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது இவ்வாறு கசிப்பு உற்பத்தி நிலையத்தில் கசிப்பு உற்பத்திக்கான பயன்படுத்தப்பட்ட பெருமளவிலான உபகரணங்களும் பரள்கள் போத்தல்கள் பலன்கள் என்பனவும் போலீசாரினர் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் தப்பியோடிள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் கொக்கட்டிச்சோலை சோலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ் மோதியதில் இருவர் பலி

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று காலை (16) இடம்பெற்ற விபத்தில்...

தேவபுரம் பகுதியில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை - தேவபுரம் பகுதியிலுள்ள புதர்க்காட்டுப்பகுதியில் காணப்பட்ட ஆண்...

பெரும்போக வேளாண்மை அறுவடை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மை அறுவடைப் பணிகள் மீண்டும் இன்று...

பொல்லால் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகுமார் மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து ஒருவர் மீது...