|

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை

பாறுக் ஷிஹான்

எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக சம்மாந்துறை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நுகர்வோர் நீண்ட வரிசையில் இன்று (1) இருப்பதனை காணமுடிந்தது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கான 03வீத தள்ளுபடியை நிறுத்தியை அடுத்து பெட்ரோலிய விநியோகஸ்தர் சங்கம் இன்று முதல் புதிய எரிபொருள் விநியோகத்தை வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்திருந்தது.

இதனால் இன்று சம்மாந்துறை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை சம்மாந்துறை பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் இல்லை என்று அறிவித்தல் போடப்பட்டிருந்தது.

சம்மாந்துறை பகுதியில் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வாகன சாரதிகள் தொழிலாளர்கள் மற்றும் சாதாரண பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *