திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதி வெல்வேரி பகுதியில் லொறியொன்று இன்று (29) வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
வவுனியாவில் இருந்து மூதூர் நோக்கி பயணித்த லொறி திருகோணமலை – அநுராதபுரம் வீதியின் வெல்வேரியை அண்மித்த பகுதியில் பாதையை விட்டு மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் சாரதி காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


