மயிலத்தமடு மேச்சல் தரை மீட்பு விவகாரத்தில் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக 2023 செப்டம்பர் 8 ஆம் தேதி கொம்மாதுறையில் இடம்பெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தின் வழக்கு இன்று (22 ஜனவரி 2025) மீண்டும் விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது. விசாரணை 9வது முறையாக 2025 ஏப்ரல் 21 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த போராட்டத்தை செய்தி அறிக்கையிட சென்ற இரண்டு ஊடகவியலாளர்களுக்கு ஏறாவூர் பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கும் விசாரணைக்கும் உட்பட்டிருந்த ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
நாட்டில் இல்லாத காரணத்தால், அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், அவரின் விபரங்களை குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்திற்கும் அனுப்புமாறு உத்தரவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், 30 பேருக்கும் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணை வழங்கப்பட்டதுடன், பிணையாளிகளுடன் ஒருவாரத்துக்குள் நீதிமன்றத்தில் பதிவு செய்யுமாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மயிலத்தமடு விவகாரம்: ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்திக்கு பிடியாணை
Date: