பிரதிசபாநாயகர் அவர்களே, எனது முதலாவது கேள்வி இந்த குடிநீர் வழங்கப்படுவது என்பது அத்தியவசியமான விடயமாக கருதப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியும்.
புதிய அரசாங்கத்திற்கு குடிநீர் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கான நேரம் கிடைத்து இருக்காது. ஆனால் இந்த குடிநீர் தொடர்பில் நாம் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம், பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் ஆகிய கூட்டங்களிலே பேசும் போது, ஏனென்றால் இந்த குடிநீர் பிரச்சினை தொடர்பில் இந்த கேள்வியிலேயே போரைத்தீவுபற்று குறித்து மாத்திரமே எழுதப்பட்டுள்ளது. என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற பாராளுமன்ற கேள்வி பதிலின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். அவர்மேலும் தெரமிவிக்கையில்,
ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகல பிரதேசங்களிலும் மிக முக்கியமாக வவுணதீவு பிரதேச செயலக பிரிவிலே மட்டக்களப்பு மாவட்டத்திற்கே நீர்வழங்கும் ஒரு தாங்கி இருக்கும். எமது உன்னிச்சை குளம் இருக்கும் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கே குடிநீர் இல்லாத ஒரு நிலை இருக்கிறது.
கடந்த ஆட்சி காலத்தில் கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்கள் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அவருடன் நேரடியாக கலந்துரையாடி 40கிலோ மீற்றர் தூரத்திற்கான குழாய் நீர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அம்பாந்தோட்டையில் இருந்து அனுப்பப்பட்டது.
ஆனால் அந்நேரத்தில் அந்த நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பித்து செய்து கொண்டு வரும்போது முன்னாள் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பிள்ளையான் அவர்கள், சாணக்கியன் அவர்கள் கூறி இந்த விடயங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காக அதனை திருப்பி அனுப்ப வைத்தார்.
அதிலே இந்த குறிப்பிட்ட காக்காச்சிவெட்டு எனும் சிறிய பிரதேசத்தில் இந்த குழாய்நீர் வேலைத்திட்டம் செய்யப்பட்டது. தற்போது என்னுடைய கேள்வி என்னவென்றால், நீங்கள் புதியதாக நீர்தாங்கிகளை அமைத்து, நீங்கள் புதிதாக நீர் வழங்கல் அமைச்சுக்குரிய அளவை அதிகரிக்கும் வரைக்கும் எங்களுடைய மட்டக்களப்பு மாவட்ட மக்கள் காத்துக் கொண்டு இருக்க முடியாது.
தற்போது உடனடியாக இருக்கின்ற வழங்கலை நான் இது தொடர்பில் போரைத்தீவுபற்று அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏற்கனவே பேசியிருக்கிறேன். அம்பாறை கொனாகொல்ல எனும் பிரதேசத்தில் இருக்கின்ற பலகல தாங்கியிலிருந்து அல்லது நவகிரியில் இருந்து அல்லது அம்பாறையில் ஏனைய இடங்களில் இருந்து சரி ஒரு மூன்று நாட்களுக்கு ஒரு தடவை அல்லது இரண்டு தடவை நீர் வழங்கும் வசதி இருக்கின்றது. ஆனால் அதற்கு குழாய்களை பொருத்த வேண்டியுள்ளது.
இந்த குழாய்களை பொருத்துவதை செய்தால், மொத்தமாக பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்த அளவை அதிகரிக்க வேண்டும். ஆனால் இந்த குழாய் இணைப்புகளை போடுவதை செய்தால் உடனடியாகவே நீர் வழங்கலாம். அதே போல மண்டூர் 14 இலே நீங்கள் கூறினீர்கள், மண்டூர் பிரதேசத்திற்கு நீர் கொண்டு வருவதற்கு மண்டூர்14 இலே 2014 இல் இருந்து ஒரு தாங்கி கட்டப்பட்ட நிலையில் ஒப்பந்தக்காரர் கைவிட்ட நிலையில் இருக்கிறது.
அது கிட்டத்தட்ட பூர்த்தி செய்யப்பட்ட ஒரு விடயம். அந்த வகையில் உங்களால் உடனடியாக அடுத்த ஒரு சில வாரங்களுக்குள் அல்லது மாதங்களுக்குள் எத்தனை கிலோமீற்றருக்கு குழாய்களை (பைப் லைன்) பொருத்தித் தருவதற்கு பைப் லைன் இருக்கின்றது? நீர் வழங்கலை அதிகரித்து மட்டக்களப்பின் ஒட்டுமொத்த நீர் பிரச்சினையை தீர்ப்பது என்பது வரவேற்கத்தக்கது. அதை நீங்கள் செய்யுங்கள். நாம் ஆதரவு தருகிறோம்.
ஆனால் உடனடியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் எத்தனை கிலோமீற்றர் உங்களால் செய்ய முடியும். அவ்வாறு உங்களால் செய்ய முடியும். இந்த ஆறாம் மாதம் வந்தால் கோடை காலத்தில் குடிநீருக்காக கிட்டத்தட்ட 10- 15 கிலோ மீற்றர் தூரம் நடக்க வேண்டி இருக்கும். தற்போது உடனடியாக எத்தனை கிலோமீற்றர் பைப் லைன் உங்கள் கைவசம் இருக்கிறது? அதனை வழங்கலாமா?
இதற்கான பதிலை வழங்கிய அமைச்சர் அவர்கள். பாராளுமன்ற உறுப்பினர், நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று மண்டூர் நீர்வழங்கல் திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த பிரதேசத்திற்கும் நீரை பெற்றுக் கொடுப்பதற்கு வெல்லாவெளி பிரதேசத்தில் தாங்கியொன்றை அமைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
உங்களது கேள்வியை பொதுவாக நோக்குவோம் ஆயின், மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்பிரச்சினை இருக்கின்றது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். சாதாரணமாக இலங்கையில் மொத்த நீர் வழங்கலில் நீர் வழங்கல் சபையினால் வழங்கப்படுவது 48 சதவீதம் ஆகும். எஞ்சிய 12 சதவீதம் வழங்கல் திட்டங்கள் மூலமே வழங்கப்படுகிறது. அதாவது மொத்த வழங்கல் 60 சதவீதமே ஆகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் 13 நீர்வழங்கல் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. 8883 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 3 இலட்சம் பேரை உள்ளடக்கும் வகையில் இவ்வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது சாதாணமாக 30அல்லது 40 சதவீதமாகவே காணப்படுகிறது என்பதை அமைச்சு என்ற ரீதியில் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் கிடைக்கும் ஒதுக்கீடுகளுக்கு அமைய சில இடங்களுக்கு 2025 வரவு செலவு திட்டத்தின் ஊடாக ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய எதிர்காலத்தில் இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.