கிருஷ்ணகுமார்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்வகேட் அப்துல் காதர் மாவட்டத்தில் அமைந்திருந்த கைத்தொலைபேசி விற்பனை வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமாகியுள்ளது.
நவீன ரக கைத்தொலைபேசி விற்பனை நிலையங்களான குறித்த வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பல கோடி ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசிகள் எரிந்துள்ளன.

நேற்றிரவு (01) சுமார் பத்து மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபை, காத்தான்குடி நகர சபை தீயணைப்பு படையினர் இரு மணித்தியாலங்கள் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் அனைத்து தொலைபேசிகளும் பற்றிகள் மற்றும் வர்த்தக நிலையத்தில் இருந்த உபகரணங்கள் அனைத்தும் முற்றாக எரிந்துள்ளன
தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.