பாதுகாப்பான வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான நடமாடும் சேவை

பாறுக் ஷிஹான்

நிந்தவூர் பிரதேச செயலகத்துடன் இணைந்து மனித அபிவிருத்தி தாபனம் பாதுகாப்பான புலம்பெயர் தொழில் (வெளிநாட்டு வேலை) தொடர்பான நடமாடும் சேவை பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை (13) நடாத்தியது.

நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ. எம். அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையில் நிந்தவூர் உதவி பிரதேச செயலாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி. அப்துல் அஸீஸ் , கல்முனை சட்ட உதவி ஆணைக்குழு சட்ட உத்தியோகத்தர் வீ.ரீ.ஹசீனா , மனித அபிவிருத்தி தாபன உதவி இணைப்பாளர் எம். ஐ. றியால் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அம்பாறை மாவட்ட காரியாலய அதிகாரிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்

இதன் போது நடமாடும் சேவைக்கு வருகைதந்த பொதுமக்களுக்கு பாதுகாப்பான புலம்பெயர் தொழில் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகளும், ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் முறைப் பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *