மாவை சேனாதிராஜாவிற்கு சித்தாண்டியில் அஞ்சலி

கிருஷ்ணகுமார்

மாவை சேனாதிராஜா அவர்கள் மறைந்தாலும் அவர் சென்ற இலட்சியப்பாதையில் தாமும் செல்வதற்கு தயாராகவுள்ளதாகவும் சலுகைக்காவும் இலாபத்திற்காகவும் உணர்வினை விற்பதற்கோ,ஒட்டுமொத்த தமிழ் தேசிய அரசியலிலிருந்து விலகவோ விரும்பவில்லையென இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

அமரத்துவமடைந்த இலங்கை தமிழரசுக் கட்சி மூத்த தலைவர் அமரர் மாவைசேனாதிராசா அவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி சித்தாண்டி இலங்கைத் தமிழரசு கட்சியின் வட்டார கிளை ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு இன்று மாலை சித்தாண்டியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு சித்தாண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு பேச்சாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன் , மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னனி தலைவர் கே.சோபனன் சித்தாண்டி இலங்கைத் தமிழரசு கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

அமரர் மாவைசேனாதிராசா அவர்களின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு , இரண்டு நிமிட மௌன அஞ்சிலியும் செலுத்தப்பட்டது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களால் இரங்கல் உரையும் ஆற்றப்பட்டது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *