“அதே வரலாறு”தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம்

Date:

பாறுக் ஷிஹான்
அதே வரலாறு என்ற தொனிப்பொருளில் தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (14) மாலை அக்கரைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகத்தில் (பட்டினப்பள்ளி வாசல் அருகாமையில்) நடைபெற்றது.

இதன் போது தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் பாராளுமன்றத் தேர்தலில் தான் தோல்வி அடைந்த பின்னர் மேற்கொண்ட கூட்டம் இதுவாகும்.

இக்கூட்டத்தில் தற்போதைய அரசாங்கத்தின் போக்கு மற்றும் செயற்பாடுகளை விமர்சனம் செய்ததுடன் கடந்த தேர்தலில் தன்னை தோற்கடிக்க மேற்கொள்ளப்பட்ட சதிகள் அதற்கு உடந்தையானவர்களை தான் அடையாளம் கண்டுள்ளமை குறித்தும் பேசினார்.

பின்னர் தற்போதை தேசிய மக்கள் சக்தி அம்பாறை மாவட்ட உறுப்பினர்களின் சுயநலமான செயற்பாடுகள் முஸ்லீம் தேசிய பட்டியல் உறுப்பினர் பெற்றுக்கொண்ட சதித்திட்டம் சம்மாந்துறை தொகுதி வேட்பாளர் ரிசாட் எம்.புஹாரிக்கு நடந்த அநியாயமான சதி என்பனவற்றை விரிவாக குறிப்பிட்டார்.

அத்துடன் தனது கடந்த கால அபிவிருத்தி திட்டங்களை விமர்சிப்பவர்கள் முதலில் தாங்கள் அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வந்த பின்னர் அவற்றை விமர்சனம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இது தவிர அவரது உரையில் கடந்த காலங்களில் இவ்வரசாங்கம் அரிசி தட்டுப்பாட்டில் கோழி உள்ளிட்ட மிருகங்களுக்கு அரிசி வகைகளை உணவாக கொடுப்பதன் காரணமாக அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டதாக குறிப்பிட்ட தகவலுக்கு பதிலடியாக அவர் கோழி ரிப் ரிப்பியா சாப்பிடும் என்ற தனது நகைச்சுவை ஊடாக கேள்வி எழுப்பியதுடன் பால் முதல் தேங்காய் விலையேற்றம் தொடர்பிலும் தனது நகைச்சுவை பாணியில் பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இக்கூட்டத்தில் தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை: தீர்ப்பு ஒத்திவைப்பு

வீதிகளை மறித்துபோராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில்விக்ரமசிங்க,அவரின் வருகைக்காக வீதியில்...

மாளிகைக்காடு மேற்கு வட்டார தேர்தல் காரியாலய திறப்பு விழா

காரைதீவு பிரதேச சபை தேர்தலுக்கான ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் மாளிகைக்காடு...

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நினைவஞ்சலி நிகழ்வு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி இது...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 6 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு முன்பாக உயிர்த்த ஞாயிறு தற்கொலை...