சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக அனுஸ்டித்து வடகிழக்கில் போராட்டங்களை முன்னெடுப்போம்

Date:

கிருஷ்ணகுமார்

இந்த நாட்டில் எந்த அரசாங்கமும் தமிழர்களின் உணர்வுகளையும் அவர்களின் உரிமைகளையும் புரிந்துகொள்ளாது.அதன்காரணமாக இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்குள்ளேயே வாழும் நிலை காணப்படுகின்றது.

அதன்காரணமாக எதிர்வரும் இலங்கையின் சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக அனுஸ்டித்து வடகிழக்கில் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக வடகிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாகாணத்தின் எட்டு மாவட்டங்களின் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவிகள் பங்குகொள்ளும் ஊடக சந்திப்பு இன்று (27) பிற்பகல் மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.

இதன்போது வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி திருமதி அ.அமலநாயகி,கிளிநொச்சிமாவட்ட தலைவி க.கோகிலவாணி,வவுனியா மாவட்ட தலைவி திருமதி சிவானந்தன் ஜெனிதா ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கருத்துகளை தெரிவித்தனர்.

எதிர்வரும் 04ஆம் திகதியை இலங்கை பூராகவும் சுதந்திரதினமாக கொண்டாடிக்கொண்டிருக்கும்போது வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள் இதனை கறுப்பு நாளாக அனுஸ்டித்துவருகின்றோம்.
எமது உறவுகளை கைகளால் வழங்கியும் வெள்ளைவானிலும் கொண்டுசெல்லப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று 15வருடமாக எந்த நீதியும் வழங்காமல் இருப்பது மிகவும் மனவேதனையுடன் உறவுகளை தேடிவருகின்றோம்.

புதிய அரசு வந்த பின்னரும் எங்களுக்கு எந்தவித சுதந்திரமும் இல்லாத நிலையில் எங்களது உறவுகளை தேடிவரும் நிலையில் எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக கிழக்கு மாகாணம் சார்பாக மூன்று மாவட்டங்களும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய கவன ஈர்ப்பு பேரணியை நடாத்துவதற்கு ஏற்பாடுசெய்திருக்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை: தீர்ப்பு ஒத்திவைப்பு

வீதிகளை மறித்துபோராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில்விக்ரமசிங்க,அவரின் வருகைக்காக வீதியில்...

மாளிகைக்காடு மேற்கு வட்டார தேர்தல் காரியாலய திறப்பு விழா

காரைதீவு பிரதேச சபை தேர்தலுக்கான ஐக்கிய சமாதான கூட்டமைப்பு கட்சியின் மாளிகைக்காடு...

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நினைவஞ்சலி நிகழ்வு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி இது...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 6 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு முன்பாக உயிர்த்த ஞாயிறு தற்கொலை...