சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா

Date:

பாறுக் ஷிஹான்

சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள நூலகங்கள் இணைந்து அமீர் அலி பொது நூலகத்தினால் ஏற்பாடு செய்த “உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே “எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாதத்தின் பரிசளிப்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை (18) அலுவலக பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.பஸ்மிலா, வரிப்பத்தான்சேனை பொது நூலகத்தின் நூலகர் ஏ.கே.ஜெஃபர், அக்கரைப்பற்று மாநகர சபை பொது நூலகத்தின் நூலகர் ஐ.எல்.எம் ஹனீபா ஆகியோர்கள் கெளரவ அதிதிகளாக கலந்து கொண்டதுடன் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், நூலகர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் வாசகர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுன், சிறந்த வாசகர்களும் கெளரவிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ் மோதியதில் இருவர் பலி

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இன்று காலை (16) இடம்பெற்ற விபத்தில்...

தேவபுரம் பகுதியில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு - முறக்கொட்டாஞ்சேனை - தேவபுரம் பகுதியிலுள்ள புதர்க்காட்டுப்பகுதியில் காணப்பட்ட ஆண்...

பெரும்போக வேளாண்மை அறுவடை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வேளாண்மை அறுவடைப் பணிகள் மீண்டும் இன்று...

பொல்லால் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகுமார் மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து ஒருவர் மீது...