புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ர் (A.S.P) இப்னு அசாருக்கு கௌரவமளிப்பு

Date:

பாறுக் ஷிஹான்

இன நல்லிணக்கம், பொதுமக்கள் தொடர்பாடல், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்திற்கான புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) பாலமுனையைச் சேர்ந்த உதுமாலெவ்வை மஹ்மூத்கான் இப்னு அசாருக்கு கல்முனை தலைமையக பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளர் எம்.ஐ .எம் ஜிப்ரி(எல்.எல்.பி) உள்ளிட்ட பொலிஸ் ஆலோசனை குழு உறுப்பினர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு வியாழக்கிழமை(30) மாலை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றதுடன் மாலை அணிவித்து வரவேற்கப்பட்ட புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ர் சிறு கலந்துரையாடல் ஒன்றினை பொலிஸ் ஆலோசனை குழு உறுப்பினர்களுடன் மேற்கொண்டார்.

இதன் போது அங்கு கருத்து தெரிவித்த புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ர்

எமது இலங்கை பொலிஸ் பதில் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனை மற்றும் வழிநடத்தலுக்கமைய ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தில் உள்ள சமூக பொலிஸ் பிரிவுடன் ஆலோசனைக்குழுக்கள் இணைக்கப்பட்டுள்ளன.இது தவிர கல்முனை பிராந்தியத்தில் போதைப்பொருள் பாவனை, வீடு உடைப்பு, உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் உரிய தகவல்களை மக்கள் ஊடாக சரியாக கிடைக்கப்பெற்றால் அவ்வாறான பிரச்சினைகள் உடனடியாக எம்மால் தீர்க்க முடியும்.பொலிஸ் ஆலோசனை குழு கூட்டங்கள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் கீழ் நடைபெற வேண்டும்.இவ்வாறான குழுக்கள் ஊடாக பல்வேறு செயற்திட்டங்களை இலங்கை பொலிஸ் முன்னெடுத்துள்ளது.இந்த கல்முனை பிராந்தியத்தில் உள்ள சகல மக்களுக்கும் பணியாற்ற ஆவலாக வந்திருக்கின்றேன்.அத்துடன் கல்முனை சமூக பொலிஸ் பிரிவுடன் இணைந்து ஆலோசனை குழு சரியான வினைத்திறனுடன் இயங்குவதை தற்போது என்னால் காண முடிகின்றது.எனவே பல்வேறு செயற்திட்டங்களை இக்குழுவின் ஊடாக முன்னெடுக்க முடியும் என நம்புகின்றேன். என்றார்.

மேற்குறித்த நிகழ்வில் கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி எம். றம்ஸீன் பக்கீர் உட்பட சமூகப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வேட்பு மனுக்களை தாக்கல் செய்த நாபீர் பவுண்டேஷனின் சுயேட்சை குழு

பாறுக் ஷிஹான் அம்பாறை உள்ளூராட்சி மன்றங்களில் சம்மாந்துறை பிரதேச சபைக்கான வேட்பு மனுக்களை...

QR code மூலமான முறைப்பாட்டை உரிய ஆதாரங்களுடன் முன்வையுங்கள்

பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய...

தென் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (19)...

பெண்கள் விடுதி சிற்றுண்டி சாலைக்கு அபராதம்

பாறுக் ஷிஹான் நோன்பு கால உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சம்மாந்துறை சுகாதார வைத்திய...