புதிய இயந்திர பாதை சேவைகள் ஆரம்பம்

Date:

நீண்டகாலமாக மிக மோசமான நிலையிலிருந்த பாதையானது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் வேண்டுகோளின் அடிப்படையில் புதிய பாதை சேவையாக இன்று (04) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுனர் ஜயந்தலால் ரட்ன சேகரவினால் இந்த சேவை இரண்டு போக்குவரத்து துறைகளிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்காக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் ஊடாக 80மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு இரண்டு இயந்திரப்பாதைகளும் கொள்வனவு செய்யப்பட்டு போக்குவரத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்வில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் கருணைநாதன் உட்பட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினையும் போரதீவுப்பற்று மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரவுகளையும் இணைக்கும் மிக முக்கியமான நீர்வழி போக்குவரத்துச் சேவையாக குறுமண்வெளி – மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை – குருக்கள்மடம் போக்குவரத்து பாதைகள் காணப்படுகின்றன.

இதன் ஊடாக தினமும் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களும், பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களும் பயணம் செய்யும் நிலை காணப்படுகின்றது.

எனினும் கடந்த காலத்தில் சேவையிலீடுபட்டுவந்த இயந்திரப்பாதையானது மிகமோசமான வகையில் சேதமடைந்திருந்ததன் காரணமாக மக்கள் ஆபத்தான பயணத்தையே முன்னெத்துவரும் நிலையிருந்தது.

இது தொடர்பில் கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு முயற்சிகளையும் முன்னெடுத்திருந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் இதற்கான புதிய இயந்திர பாதைகள் வழங்கப்பட்டு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இயந்திரப்பாதை சேவையில் செல்லாவிட்டால் போரதீவுப்பற்று மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரவுகளுக்கு செல்வோர் சுமார் 20 KM தூரத்தினை கடக்கவேண்டிய நிலையில் பாதை சேவையூடாக சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்குள் தமக்கான பகுதியை அடைய முடியும் என மக்கள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஸ்ரீ.ஐ.கா.ஸ்தாப‌க‌ த‌லைவ‌ரின் மே தின வாழ்த்துச்செய்தி

மனித நாகரீகமானது இயற்கையின் சவால்களை கண்டு அஞ்சாத மனித உழைப்பினாலேயே உருவாக்கப்பட்டதாக...

எங்களால் நிராகரிக்கப்பட்டவர்களே JVPயின் வேட்பாளர்களாக இணைந்துள்ளனர்

தமிழரசுக்கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக ஆசனம் கேட்டு கெஞ்சி நின்று எங்களால் நிராகரிக்கப்பட்டவர்களே...

மயிலத்தமடு நிலப்பிரச்சினை: விசாரணை ஒத்திவைப்பு

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பாக நீதி கோரி...

சுயேட்சை குழு தலைவர் நஸாரின் மே தின வாழ்த்துச் செய்தி

உலகவாழ் உழைக்கும் சமூகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில், இவ்வருட சர்வதேச...