
இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் டேவிட் பைன் ( David Pine) மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு இன்று (26) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் சுற்றுலாத் துறை, மீன்பிடி மற்றும் எரிசக்தி துறைகள் குறித்து தூதுவரும் ஆளுநரும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினர்.
இதன்போது கிழக்கு ஆளுனரால் உயர்ஸ்தானிகருக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டன.


