
இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (08) திருகோணமலை மாவட்ட கட்சி அலுவலகத்தில் இடம் பெற்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட கிளைத்தலைவர் எஸ்.குகதாசன் தலைமையில் இடம்பெற்றது.
எட்டு சபைகளில் வெற்றி பெற்ற 36 உறுப்பினர்களே இதன்போது சத்திய பிரமாணம் செய்து கொண்டனர்.