திருக்கோணமலை பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருக்கோணமலை பத்தாம் குறிச்சி அண்ணா மீனவர் சங்கத்திற்கு விஜயம் இன்று (11) மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது கடலுக்கு சென்று படகுகள் காணாமல் போவதை தடுப்பதற்காக, ஆபத்து காலங்களில் தேடிப் போகும் படகுக்கான 8.5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள அவசர அவசர உள்செலுத்தி இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த இயந்திரத்தை அண்ணா மீனவர் சங்கத் தலைவர் கு. வரதராஜன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மீனவர்கள், படகு உரிமையாளர்கள் மற்றும் பல நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு திருக்கோணமலை தமிழ் மீனவர்கள் நலன்புரிச் செயற்பாட்டாளர் உதயகுமார் அஜித் குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது.