கிருஷ்ணகுமார்
வறுமையானது மாணவர்களின் கல்விக்கு என்றும் தடையாக இருக்ககூடாது. அதனை கடந்து மாணவர்கள் கற்கவேண்டும் என குளோபல் வின்ங்ஸ் சேரிட்டி அமைப்பின் ஸ்தாபகர் சோ.கோபிகிருஷ்ணா தெரிவித்தார்.

வறுமையான மாணவர்கள் சாதணையாளர்களாக மாறும்போது வறுமையென்ற நிலையென்பது அகற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரி மற்றும் உதயபுரம் தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்று பெரியகல்லாறு மத்திய கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வானது பெரியகல்லாறு மத்திய கல்லூரியின் அதிபர் ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக குளோபல் வின்ங்ஸ் சேரிட்டியின் ஸ்தாபகர் சோ.கோபிகிருஷ்ணா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

பெரிய கல்லாற்றில் வறுமை கோட்டின் வாழ்கின்ற 130 மாணவர்களுக்கான பாதனிகள் இந்த நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கௌரவ அதிதிகளாக உதயபுரம் பாடசாலையினுடைய அதிபர் உ.கோகுலராஜ் அவர்களும் சர்வார்த்த ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய முன்னாள் வண்ணக்கர் நே.காமல்ராஜ் அவர்களும் மற்றும் பிரதி அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
