கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்பு

Date:

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 11வது புதிய துணைவேந்தராக பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிறந்த பௌதிகவியலாளரும் கல்வி மேலாண்மைத் தலைவருமான பேராசிரியர் பா.பிரதீபன் அவர்கள் கல்வி ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழக முகாமைத்துவம் ஆகிய இரண்டிலும் வலுவான செயல்திறன் பதிவைக் கொண்டவர்.

இலங்கையின் ஆய்வுப் புலமைப்பரிசில் மற்றும் போட்டிமிக்கதும் பிரசித்தி பெற்றதுமான இங்கிலாந்தின் காமென்வெல்த் முனைவர் புலமைப்பரிசில்களைப் பெற்று தனது கலாநிதிப் பட்டத்தை தென்னாபிரிக்காவின் ஜோகன்னஜ்பர்க பல்கலைக்கழக்தில் பெற்றுக் கொண்டுள்ளார்.

தனது முதுமாணிப்பட்டத்தினை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் சிறப்பு இளமாணிப்பட்டத்தினை கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார்.

இவர் தனது அறிவியல் பங்களிப்புக்களுக்காக உலகளவில் பெயர்பெற்றவர் மற்றும் 2018ம் ஆண்டிலிருந்து பௌதிகவியலில் சிறப்பு பேராசிரியராக விளங்குகின்றார்.

இவர் அடர்நிலைப் பொருண்மை பௌதிகவியலில் சிறப்பு நிபுணத்துவம் கொண்டவர். விஞ்ஞான உலகில் அவரின் முக்கிய செல்வாக்கை அடையாளப்படுத்தும் வகையில் இவரது ஆய்வுக்கட்டுரைகளானது முன்னணி சர்வதேச ஆய்விதழ்களான ஸ்கோபஸ், அறிவியல் மேற்கோள் குறியீடு போன்றவற்றில் 10 ஆராய்ச்சி கட்டுரைகளும் எச்-இன்டெக்ஸ் ஆய்விதழில் 07 கட்டுரைகளும் வெளியடப்பட்டுள்ளதுடன் இவரது ஆய்வுக்கட்டுரைகள் 240ற்கும் மேற்பட்ட மேற்கோள்களை கொண்டுள்ளன.

இவரது சிறந்த ஆராய்ச்சிகளை அங்கீகரிக்கும் வகையில் மெரிட் விருது (2013), சபரத்னம் பரிசு (2016), மற்றும் இரண்டு ஜனாதிபதி விருதுகள் (2014, 2015) உள்ளிட்ட பல கௌரவப்பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் தனது ஆராய்ச்சிப் பணிகளுக்கு அப்பால், பேராசிரியர் பா.பிரதீபன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பல முக்கிய கல்வி மற்றும் நிர்வாக பொறுப்புக்களில் சிறந்த தலைமைத்துவத் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.

இரண்டுமுறை பதில் உப வேந்தராகவும், விஞ்ஞான பீடத்தின் தலைவராகவும் மற்றும் பௌதிகவில் துறையின் தலைவராக இரு தொடர்காலங்களில் பணியாற்றியதனூடாக சிக்கலான கல்வி நிர்வாக அலகுகளை வெற்றிகரமாக நிர்வகிக்கும் திறனை நிரூபித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் கல்விக்கொள்கைகளை வடிவமைப்பதற்கும், ஆராய்;ச்சித் தரத்தை உயர்த்துவதற்கும், கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும் இவர் பாடத்திட்ட மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் வெளியீடு, பல்கலைக்கழக விதிமுறைகள் உள்ளிட்ட முக்கிய குழுக்களுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

ஒரு அறிஞர் மற்றும் நிர்வாகியாக கோட்பாடு மற்றும் நடைமுறை அனுபவங்களை ஒருங்கிணைக்கும் அவரது திறமையானது பல்கலைக்கழகத்தின் விரிவாக்கத்திற்கான உத்தேசபூர்வமான பங்களிப்பை வழங்குகின்றது.

பேராசிரியர் பா.பிரதீபன் அவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வித்தரத்தையும், உலகளாவிய ரீதியிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் ஓர் சிறந்த வழிகாட்டி என்பதனை இவரது தலைசிறந்த ஆராய்ச்சி அனுபவம், நிர்வாக நிபுணத்தவம் மற்றும் உலகளாவிய தொடர்புகளானது உறுதிசெய்கின்றன.

கிருஷ்ணகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பொத்துவிலில் மணல் அகழ்வு தடங்கல்களை தீர்க்க அரசாங்க அதிபர் உடனடி நடவடிக்கை

ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்....

சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னி அமர்வு

சம்மாந்துறை பிரதேச சபையின் 05வது சபையின் 01வது கூட்ட அமர்வு நடவடிக்கைகள்...

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.எச். முபாறக் ஓய்வு

இலங்கை பொலிஸ் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையும் நம்பிக்கையும் கொண்ட...

மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்...