நீதி கோரி போராட்டம்

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பிலும் இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய இப்போராட்டமானது வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் இன்று 26.07.2025 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக
இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்ட மானது முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி ஶ்ரீநாத் ஆகியோரும், மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது போராட்ட்தில் கலந்து கொண்ட அனைவரும் கையொப்பமிட்டு தங்களின் எதிர்ப்பினை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
