இலஞ்சமாக வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் கைது

Date:

மட்டு கரடியனாறு பகுதியில் கடை ஒன்றிற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக 6,000 ரூபா இலஞ்சமாக வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் (PHI) ஒருவரை இன்று (29) அதிகாரிகள் மாறுவேடத்தில் சென்று சுற்றிவளைத்து கைது செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உணவு கடை ஒன்றை அமைப்பதற்காக கரடியனாறு சுகாதார பிரிவில் கடமையாற்றிவரும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரிடம் அனுமதி கேட்டுள்ள நிலையில, அவர் அதற்கு இலஞ்சமாக 6,000 ரூபாவை கோரியுள்ளார்.

இதனையடுத்து குறித்த கடை உரிமையாளர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்கழுவிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, அவர்களின் வழிகாட்டலில் சம்பவதினமான இன்று பகல் 12.00 மணியளவில் கரடியனாறு பகுதியில் உள்ள வீதியொன்றில் இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினர் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற பொது சுகாதார பரிசோதகர் கடை உரிமையாளரிடம் இலஞ்சமாக 6,000 ரூபாவை வாங்கிய நிலையில் அங்கு மாறுவேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் 54 வயதுடையவர் எனவும், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

கிருஷ்ணகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

றவூப் ஹக்கீம் குறுஞ்செய்தி ஊடாக இயங்கும் டம்மி தலைவர்

றவூப் ஹக்கீம் என்பவர் கட்சி கட்டுப்பாட்டினை மீறி செயற்படும் ஒரு சர்வதிகாரியே...

முள்ளிவாய்க்காலில் நடந்த அவலம் காரணமாக தமிழினம் அழிவினை சந்தித்திருக்கின்றது

எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி முதல் மே மாதம் 18ஆம்...

தமிழ் இன அழிப்பு வாரம்…

தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய இனத்தினை உதாசீனப்படுத்துகின்ற, அலட்சியப்படுத்துகின்ற, அவர்களின் நியாயமான...

29 கைதிகள் விடுதலை

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று...