பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை சீர்செய்யும் நடவடிக்கை

Date:

பாறுக் ஷிஹான்

எதிர்வரும் நோன்புப் பெருநாள் மற்றும் சித்திரை புத்தாண்டுகளை முன்னிட்டு கிளின் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை சீர்செய்யும் நடவடிக்கை ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கல்முனை பேருந்து நிலையம் பொது நூலகம் அம்மன் கோவில் வீதி தாளவட்டுவான் சந்தி நற்பிட்டிமுனை புறநகர் பகுதி கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை கல்முனை ஆதார வைத்தியசாலை வங்கிகள் தனியார் நிறுவனங்கள் கல்முனை மாநகர பகுதிகள் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பகுதி கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி ஆகியவற்றில் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் உட்பட பாதசாரிகளுக்கு இடையூறாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத விளம்பர பலகைகள் மற்றும் படிக்கட்டுக்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டதுடன் ஒலிபெருக்கி வாயிலாக அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.

குறித்த நடவடிக்கைகள் யாவும் அண்மையில் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர கலந்துரையாடலின் பின்னர் கல்முனை பிராந்தியத்தில் கட்டம் கட்டமாக உரிய உரிய திணைக்களங்கள் கல்முனை மாநகர சபை என்பவற்றுடன் இணைந்து பொதுப் போக்குவரத்து நடைமுறைகள் சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இந்நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச். சமூத்திர ஜீவ கண்கானிப்பின் கீழ் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஜி.டி.எஸ். அமரசிங்க ஆலோசனைக்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் வழிநடத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் தலைமையில் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான பி.ரி நஸீர் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் இப்பகுதிகளில் பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் போக்குவரத்து நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தவிர கடந்த காலங்களில் பாடசாலைக்கு செல்லும் மற்றும் பாடசாலையை விட்டு வீடு செல்லும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதனால் மாணவ மாணவிகள் ஆசிரியர்களின் போக்குவரத்து சிரமங்களை தவிர்ப்பதற்காக போக்குவரத்தை சீர்செய்வதற்கு அண்மைக்காலமாக கலந்துரையாடல்கள் பல்வேறு மட்டங்களில் இடம்பெற்று உரிய நடவடிக்கைகள் எடக்கப்பட்டள்ளளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஸ்ரீ.ஐ.கா.ஸ்தாப‌க‌ த‌லைவ‌ரின் மே தின வாழ்த்துச்செய்தி

மனித நாகரீகமானது இயற்கையின் சவால்களை கண்டு அஞ்சாத மனித உழைப்பினாலேயே உருவாக்கப்பட்டதாக...

எங்களால் நிராகரிக்கப்பட்டவர்களே JVPயின் வேட்பாளர்களாக இணைந்துள்ளனர்

தமிழரசுக்கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக ஆசனம் கேட்டு கெஞ்சி நின்று எங்களால் நிராகரிக்கப்பட்டவர்களே...

மயிலத்தமடு நிலப்பிரச்சினை: விசாரணை ஒத்திவைப்பு

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பாக நீதி கோரி...

சுயேட்சை குழு தலைவர் நஸாரின் மே தின வாழ்த்துச் செய்தி

உலகவாழ் உழைக்கும் சமூகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில், இவ்வருட சர்வதேச...