இராணுவத்திடம் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்

Date:

பாறுக் ஷிஹான்

சட்டவிரோத மதுபானம் காரணமாக பல சமூக மற்றும் குடும்ப பிரச்சினைகள் எழுந்துள்ளதாகக் கூறி பொதுமக்கள் இலங்கை இராணுவத்திடம் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை கணபதிபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலரே கடந்த புதன்கிழமை(19) அன்று கவனயீர்ப்பு பொராட்டம் ஒன்றினை மேற்கொண்டு இவ்வாறு இராணுவத்தின் உதவியை நாடியுள்ளனர்.இதன் போது சட்டவிரோத மதுபானத்தால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் குடும்ப மோதல்கள் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் சம்மாந்துறை பொலிஸார் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி போராட்டக்காரர்கள் இவ்வாறு மல்வத்தை பகுதியிலுள்ள இலங்கை இராணுவத்தின் 24வது காலாட்படை பிரிவு தலைமையகத்திற்குச் சென்று இராணுவ அதிகாரிகளிடம் தங்கள் குறைகளை தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து உரிய தரப்பினரிடம் தெரிவிக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவ அதிகாரிகள் அம்மக்களிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மட்டு மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு

கிருஷ்ணகுமார் இனங்களிடையே ஐக்கியத்தினையும் ஒற்றுமையினையும் ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாடு...

முன்னால் அமைச்சர் கைது: இளைஞர்கள் கொண்டாட்டம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது...

அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு அம்பாறை...

உலக காசநோய் தினத்தினை முன்னிட்டு விழிப்பூட்டல் கருத்தரங்கு

(பாறுக் ஷிஹான்) உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் பரவுதல் பற்றியும், அதைத்...