சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்க தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா தெரிவு

Date:

பாறுக் ஷிஹான்

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா மீண்டும் எவ்வித போட்டிகளுமின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் நடப்பாண்டிற்கான பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்ற போது மீண்டும் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா தெரிவானார்.மேலும் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய செயலாளராக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.வை. அன்வர் ஸியாத்தும் பொருளாளராக சட்டத்தரணி எம்.எம்.எஃப். ஷாமிலாவும் உப தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.நஸீலும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா கிழக்கின் பல்வேறு நீதிமன்றங்களுக்கு சென்று வாதாடும் திறமை கொண்டவர் என்பதுடன் கடந்த காலங்களிலும் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும், பிராந்திய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டு சட்டத்தரணிகளின் நலன்சார் விடயங்களிலும், சம்மாந்துறை நீதிமன்றம் உருவாகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கட்டாக்காலி மாடுகள் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

பாறுக் ஷிஹான் இவ்விடயத்தை கடிதம் ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளதுடன் இரவு நேரங்களில் பயணிக்கும்...

தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தல்

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி...

கிழக்கு பகுதிகளுக்கான ரயில் சேவை பாதிப்பு

கிருஷ்ணகுமார் மஹோவிலிருந்து மட்டக்களப்புக்கு சென்ற ரயில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்...

பெண்களின் செயற்பாடுகளே நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புகிறது

கிருஷ்ணகுமார் இந்த நாட்டில் அதிகளவான பெண்களின் செயற்பாடுகளே நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்பிவருவதாக மட்டக்களப்பு...