கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின்(RRDP)கீழ் விதிகள் அங்குரார்ப்பண நிகழ்வு

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவின் கீழ் மல்வத்தை-01, மல்வத்தை-02 மற்றும் மலையடிக்கிராமம்-04 ஆகிய கிராம சேவகர் பிரிவில் சுமார் 15 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மல்வத்தை-02 புதுநகர் 01ம் குறுக்குத் தெரு, மல்வத்தை-01 திருவள்ளுவர் புறம் சின்னத்தம்பி வீதி மற்றும் மலையடிக்கிராமம்-04 அஸ் ஸமா பாடசாலை வீதி ஆகிய வீதிகளின் புனரமைப்புக்கான அங்குரார்ப்பண நிகழ்வு சனிக்கிழமை (23) மாலை சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா கலந்து கொண்டு வீதி வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.

மேலும் இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ முனாஸீர்,மாவட்ட செயலக கணக்காளர் ஐ.எம்.பாரீஸ், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான வை.வி.எம்.நவாஸ், எஸ். தீம் ஜனாப், எஸ்.எல்.ஏ. நஸார், ஏ.சீ. சஹீல், எஸ்.டனோஜன், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.பர்ஹான், தேசிய மக்கள் சக்தியின் வளத்தாப்பிட்டி கிராம அமைப்பாளர் எஸ்.சாந்தகுமார், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாறுக் ஷிஹான்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *