நிந்தவூர் கல்முனை பிரதேச செயலகத்திற்கு எம்.எஸ்.அப்துல் வாசித் விஜயம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாசித்தின் நிந்தவூர் பிரதேசத்திற்கான பிரதேச ஒருங்கினைப்பு குழு இணைப்பாளராக நிந்தவூர் பிரதேச உறுப்பினரான எம்.ஏ.என்.ரஸீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனத்தை வழங்குவதற்காக நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டு நிந்தவூர் பிரதேச ஒருங்கினைப்பு குழு இணைப்பாளராக நியமிப்பதற்கான கடிதத்தினை ஒப்படைப்பதற்காகவும் நிந்தவூர் பிரதேச விடயங்கள் தொடர்பாகவும் பிரதேச செயலாளரிடம் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடினார்.
நியமனக் கடிதம் இன்றைய தினம்(25) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இதே வேளை கல்முனை பிரதேச செயலகத்திற்கும் சென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாசித் பல்வேறு விடயங்களை பார்வையிட்டார்.
பாறுக் ஷிஹான்
