மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்

தமிழ் – சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று (14) சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ பூரண சுதாகரன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற வழிபாடுகளின்போது சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மருத்துநீர் வைக்கப்பட்டு விசேட அபிசேகம் நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

இதன்போது ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டை குறிக்கும் வகையில் கைவிசேடமும் ஆலயத்தினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணகுமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *