வயது குறைந்த நடுவராக இலங்கையர் கடமையாற்ற தெரிவு

Date:

கத்தார் கிரிக்கெட் கட்டுபாட்டு சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட T10 Ramadan வெற்றி கிண்ண இறுதிப் போட்டியின் நடுவராக இலங்கை சார்பாக அபூபக்கர் முஹம்மட் றிலாஸ் வயது குறைந்த நடுவராக கடமையாற்ற தெரிவு செய்யபட்டுள்ளார்.

கத்தார் Asian Town சர்வதேச cricket மைதானதில் இரவு போட்டியாக இடம்பெற்ற இத்தொடரில் கட்டார் கிரிக்கெட் சபையில் பதிவு செய்யப்பட்ட 14 மிக பலம் பொருந்திய முன்னணி (Premium club) கழகங்கள் போட்டிபோட்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி இருந்தனர்.

இத் தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நாட்டினை சேர்ந்த பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர்.

இத் தொடரில் மொத்தமாக 49 போட்டிகளுக்காக 22 சிறந்த நடுவர்கள் (Umpires) கடமையாற்றினர். இவர்கள் india, pakistan, srilanka மற்றும் பங்களாதேஷ் நாட்டினை பிரதி நிதித்துவப்படுத்தி கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனார். இப்போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட ஒரே ஒரு நடுவர் என்பதுடன், இளம் வயது நடுவர் என்பதும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.

இவர் சிறப்பான முடிவுகளையும், சிறந்த தீர்ப்புகளையும் வழங்கியதன் காரணத்தால் league போட்டிகள், காலிருத்திப் போட்டிகள், அரையிருத்திப் போட்டி மற்றும் இறுதிப் போட்டிகளுக்குமான மிக முக்கியமான போட்டிகளுக்கு நடுவராக கடமையாற்றினார் என்பதும் சிறப்பம்சமாகும். இவ் இறுதிப் போட்டிக்கு இவருடன் இணைந்து பாக்கிஸ்தான் நாட்டினை சேர்ந்த நடுவரும் இணைந்து கடமையாட்டினார். இப்போட்டிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

இவ் இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக qatar cricket board செயலாளர் அவர்களுடன் மிக முக்கிய அதிதிகள் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற வீரர்களுக்கு விருதுக்களையும் வழங்கிவைத்தனர்.

இத் தொடருக்கு கட்டார் நாட்டின் பிரபல நிறுவங்கள் அனுசரணை பிரதான அனுசரணை வழங்கி இருந்தது.

இவர் கத்தார் கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படுகின்ற டி20 போட்டிகள், ஒருநாள் போட்டிகள், பல்கலைக்கழங்களுக்கு இடையிலான போட்டிகள், பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகள், மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையிலான போட்டிகள் என பல்வேறு போட்டிகளில் தனது திறமையினால் குறிப்பிட்ட வருடங்களுக்குள் மிக சிறப்பான முறையில் நடுவராக கடமையாற்றி வருகின்றார், கத்தார் கிரிக்கெட் சபையில் கிட்டத்தட்ட 150 மேற்பட்ட நடுவர்கள் காணப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இவர் இன்னும் சில மாதங்களில் கத்தார் கிரிக்கெட் சபை சார்பாக ICC யினால் நடாத்தப்பட இருக்கின்ற தரம் -2 பரீட்சைக்கு தோற்றவு ள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க சிறப்பாம்சமாகும்.இவர் இலங்கை கிரிக்கெட் காட்டுப்பாட்டு சபையின் தரம் -4 நிலை நடுவராகவும், இலங்கை கிரிக்கெட் நடுவர் சங்கத்தின் தரம் 2ம் நிலை நடுவராகவும் கடமையட்டுகின்றார். இவர் கடந்த வருடம் நடை பெற்ற தரம் 3 நடுவர்களுக்கான பரீட்சையில் தன்னுடைய வெளிநாட்டு பயணம் காரணமாக தோற்ற வில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவர் தற்போது கத்தார் நாட்டில் pro divison கிரிக்கெட் நடுவராக இலங்கை நாட்டின் சார்பாக தெரிவு செய்யப்பட்ட ஒரே இளம் வயதுடைய நடுவர் என்பதும் விசேட அம்சமாகும்.மேலும் இவர் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை நற்பிட்டிமுனை NCC விளையாட்டு கழகத்தின் தலைவரும்,தற்போது கத்தார் நாட்டில் சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவும் கடமையாற்றுகின்றார் என்பதோடு இவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரருமாவார்.

பாறுக் ஷிஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஸ்ரீ.ஐ.கா.ஸ்தாப‌க‌ த‌லைவ‌ரின் மே தின வாழ்த்துச்செய்தி

மனித நாகரீகமானது இயற்கையின் சவால்களை கண்டு அஞ்சாத மனித உழைப்பினாலேயே உருவாக்கப்பட்டதாக...

எங்களால் நிராகரிக்கப்பட்டவர்களே JVPயின் வேட்பாளர்களாக இணைந்துள்ளனர்

தமிழரசுக்கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக ஆசனம் கேட்டு கெஞ்சி நின்று எங்களால் நிராகரிக்கப்பட்டவர்களே...

மயிலத்தமடு நிலப்பிரச்சினை: விசாரணை ஒத்திவைப்பு

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பாக நீதி கோரி...

சுயேட்சை குழு தலைவர் நஸாரின் மே தின வாழ்த்துச் செய்தி

உலகவாழ் உழைக்கும் சமூகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில், இவ்வருட சர்வதேச...