அரிசி பதுக்கல் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைப்பு

Date:

பாறுக் ஷிஹான்

அரிசி களஞ்சியசாலை மற்றும் அரிசி விற்பனை நிலையங்கள்  மீது திடீர் சுற்றிவளைப்பு இன்று அம்பாறை மாவட்ட நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால்  மேற்கொள்ளப்பட்டது. 

நுகர்வோர் அலுவல்கள் அதிகார தலைவரின் ஆலோசனையுடன்  நிறைவேற்று பணிப்பாளார்  வழிகாட்டலில்  அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி சாலிந்த பண்டார நவரத்ன மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளினால் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பிரதேசத்தில் இவ் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. 

இதன் போது பெரிய நீலாவணை பொலிஸாரின் பிரசன்னத்துடன்   புலன் விசாரணை அதிகாரிகளினால் பாண்டிருப்பு மருதமுனை பெரிய நீலாவணை பகுதியில் உள்ள அரிசி  களஞ்சியசாலை மற்றும் அரிசி வர்த்தக நிலையங்கள்  பரிசோதணை மேற்கொள்ளப்பட்டு எச்சரிக்கையுடன் அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டது. 

மேலும் பல அரிசி  களஞ்சியசாலை மற்றும் அரிசி வர்த்தக நிலையங்களுக்கு  எதிராக நீதிமன்றதினுடாக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அரிசி பதுக்கலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் தொடர்பில் அறியத்தருமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் சுமார் 20 க்கும் மேற்பட்ட அரிசி விற்பனை நிலையங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் விலைப்பட்டியல் காட்சிப் படுத்த தவறிய வர்த்தகர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்மாந்துறையில் வெசாக்தின அன்னதானம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ்...

சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் விசேட வெசாக்...

வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை துறைமுகத்தில் இன்று (13) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க...

மட்டக்களப்பு நகரில் வெசாக்தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இன்று மாலை பல்வேறு...