பெரியவட்டவான் பகுதியில் T56 துப்பாக்கி கண்டெடுப்பு

கிருஷ்ணகுமார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவட்டவான் பகுதியில் T56 துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெரியவட்டுவானில் உள்ள படைமுகாமில் உள்ள மைதானம் ஒன்றில் செங்கல் உற்பத்திக்காக அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டபோது இந்த ரி56 துப்பாக்கியும் வெற்று மகசின் ஒன்றும் மீட்கப்பட்டுள்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதி முன்னர் விடுதலைப்புலிகளின் பகுதியாகயிருந்து பின்னர் படைமுகாமாக செயற்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் மகசின்கள் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *