போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட மூவர் கைது

நீண்ட காலமாக போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த இளம்பெண் உட்பட மூவர்  சாகாமம் விசேட அதிரடிப்படையினரால்  கைது செய்யப்பட்டனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நீண்ட நாட்களாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளம் பெண் தொடர்பில் சாகாமம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய செவ்வாய்க்கிழமை(24) மாலை  சோதனை நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டதுடன்  பெண் சந்தேக நபர் உட்பட மூன்று   சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது விசேட அதிரடிப் படையினருடன்   நிந்தவூர் பொலிஸ் நிலைய பொலிஸாரும்  இணைந்து குறித்த  இளம் பெண்  உட்பட மூவரை  கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கைதான 27 ,32  வயதிற்குட்பட்ட  சந்தேக நபர்களிடம் இருந்து ஹெரோயின்  போதைப் பொருட்கள் ஒரு தொகுதி மீட்கப்பட்டதுடன் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அத்துடன் கைதான சந்தேக நபர்கள்   சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள மை குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *