மேதினத்திற்கு செலவுசெய்த செலவீனங்களை வெளிப்படுத்துங்கள் – சாணக்கியன் சவால்

தேசிய மக்கள் சக்தியினர் ஊழல்வாதிகள்,மோசடி செய்கின்றவர்கள் இல்லையென்றால் நேற்று நடைபெற்ற மேதினத்திற்கு செலவுசெய்த செலவீனங்களை வெளிப்படுத்துங்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சவால் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையிலான பல்வேறு கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
திருப்பழுகாமம் கலாசார மண்டபத்தில் திருப்பழுகாமம் வட்டார வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையிலான பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் திருப்பழுகாமம் வட்டாரத்தில் போட்டியிடும் நா.இந்திரநாதன்,வீ.அரசரெத்தினம் ஆகியோரை ஆதரிக்கும் வகையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஊழல்மோசடிகளை ஒழிக்கப்போகின்றோம் என்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி நேற்றைய தினம் கொழும்பில் மேதினத்தினை பிரமாண்டமாக தேசிய மக்கள் சக்தி ஏற்பாடுசெய்திருந்தது.அனைவருக்கும் சிவப்பு ரீசேட்டுகள் வழங்கி பெருமளவான பணத்தினையும் செலவளித்திருந்தனர்.

கொழும்புக்கு 5500 பஸ்களில் மக்களை கொண்டுவருவதற்கான அனுமதிகளை பொலிஸில் பெற்றிருக்கின்றார்கள்.இவ்வளவு பஸ்களில் மக்களை கொண்டுவருவதானால் எவ்வளவு நிதி தேவைப்பட்டிருக்கும்.

இதற்கான பணம் அனுரகுமார திசாநாயக்கவின் வீட்டிலிருந்துவந்ததா, அல்லது பிரதமரின் வீட்டிலிருந்துவந்ததா.எங்கிருந்து இவ்வளவு நிதி வந்தது.

இவர்கள் ஊழல்வாதிகள் இல்லை,மோசடி செய்யவில்லையென்றால் நான் பகிரங்க சவால் விடுக்கின்றேன் உங்கள் கட்சிக்கு நேற்றைய கூட்டத்தின ;இவ்வாறான செலவுகளை எவ்வாறு செய்கின்றீர்கள் என்பதை வெளிப்படுத்துங்கள்.அவர்களினால் செய்யமுடியாது.

அவர்களுக்கு வரும் நிதி தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். தெரியப்படுத்தமுடியாவிட்டால் இவர்களும் ஊழல்வாதிகள்தான்.

கிருஷ்ணகுமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *