மரக்கறி வியாபார மோதல்; நால்வர் கைது –விளக்கமறியலில் வைப்பு

Date:

கிருஷ்ணகுமார்

மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் மரக்கறி வியாபாரம் செய்வோருக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ள சந்தேக நபர்கள் நான்கு பேரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (04) உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
தாக்குதலுக்குள்ளான நபர் கல்லடி பாலத்துக்கு அருகாமையில் வீதி ஓரத்தில் பட்டா ரக வாகனத்தில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் குறித்த தாக்குதல் சம்பம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயரிழந்தவர் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய வர்த்தகர் என அறியப்பட்டுள்ளது.

இந்நிலை யில், உயிரிழந்தவரின் சகோதரரான வியாபாரி தனது பட்டா ரக வாகனததை நிறுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததுடன், அந்த வாகனத்துக்கு அருகாமையில் இன்னொரு வர்த்தகர் தனது வாகனத்தை நிறுத்தி வியாபாரம் செய்த நிலையில் இருவருக்கும் இடையே வர்த்தக போட்டி காரணமாக வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவத்தில் உயிரிழந்தவரின் சகோதரர் தனது சகோதரனுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக அழைப்பு விடுத்து வரவழைத்து, அவர் அங்குவந்து சகோதரனுடன் வாய்தர்கத்தில் ஈடுபட்ட வர்த்தகர் மீது தாக்குல் மேற்கொண்டதை அடுத்து அங்கு இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் மீது 4 பேர் கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனிடையே தாக்குதலை மேற்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிய கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு வர்த்தகர்களும் பொலிஸாரிடம் சரணடைந்ததையடுத்து அவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு தடவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டனர்.

இச்சம்பவத்தில் ஆயித்தியமலையை பிறப்பிடமாகவும் வாழைச்சேனை பேத்தாழை பகுதியில் திருமணம் செய்து கெண்டவருமான ஒரு பிள்ளையின் தந்தையான டிலோஜன் (வயது -33) என்பவர் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடலில் 7 இடத்தில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தி பாதியாக உடைந்த நிலையில் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளதுமேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர்மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழ்நிலப்பகுதிகள்...

செவ்வந்தி பாணி போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பில் கைதுசெய்யப்பட்ட போலி சட்டத்தரணியை அடையாளம் காணும் அணிவகுப்பு நீதிமன்றத்தில் இன்று...

மக்கள் நலன்சார்ந்த விடயங்களை ஆரம்பித்திருக்கும் நிலையிட்டு சந்தோசமடைகின்றோம்

மருந்து என்ற பெயரில் உப்புநிரைக்கொண்டுவந்து மக்களுக்கு வழங்கி மக்களை மரணிக்கசெய்து அதன்மூலம்...

வீதி விபத்துகளை ஏற்படுத்தும் செங்கலடி சந்தை வீதிக்கு மாற்று திட்டம்?

அடிக்கடி வீதி விபத்துக்களை ஏற்படுத்தும் செங்கலடி பொதுச் சந்தைக்கு முன்பாக உள்ள...