கதிர்காமம் பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை திறப்பு

Date:

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம திருத்தலத்திற்கான பாதை யாத்திரைக்காக குமுண தேசிய பூங்கா உடான காட்டுவழிப்பாதை இன்றையதினம் (20) அதிகாலை உகந்தை மலை தேவஸ்தானத்தில் இடம்பெற்ற விஷேட பூசை வழிபாடுகளை தொடந்து திறந்து வைப்பட்டது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதே வேளை கதிர்காம பாத யாத்திரையின் போது வனப் பூங்கா மற்றும் வன விலங்குகளை புகைப்படம் எடுத்தல் மற்றும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு அனுமதி இல்லை என்றும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் எடுத்துச் இல்லாதிருக்குமாறும் சுற்றாடல் அமைச்சர் வைத்திய தம்மிக பட்டபெந்தி பக்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இம்முறை கதிர்காம புனித பூமியை தரிசிப்பதற்கு இந்த வருடத்தில் 30,000 இற்கும் அதிகமானோர் பாத யாத்திரைக்காக வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் சம்பிரதாய பூர்வமாக ஒவ்வொரு வருடமும் இந்தப் பாத யாத்திரைக்காக பக்தர்கள் கலந்துகொள்வதுடன், இவ்வாறு சுற்றாடல் நேயமாக பொலித்தீன், பிளாஸ்டிக் பயன்படுத்தாது இந்த யாத்திரையை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து யாழ். மற்றும் குமண வனப் பூங்காக்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பாரம்பரிய பாதயாத்திரையை சூழல் நேயத்துடன் மாத்திரம் மேற்கொள்ளுமாறு இதன்போது அமைச்சர் பக்தர்களிடம் கோரிக்கை விடுத்ததுடன், பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் பாவனையின்றிய பசுமை பாத யாத்திரையாக மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

அதன்படி இம்முறை பாதையாத்திரையில் பங்குபற்றும் யாத்திரிகர்கள் சூழல் கட்டமைப்பிற்கு மற்றும் வனப் பூங்காக்களில் வாழும் விலங்குகளின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் செயல்படுமாறும் வைத்தியர் தம்மிக பட்டபெந்தி கோரிக்கை விடுத்தார்.

பாதயாத்திரைக்காக குமண மற்றும் யாழ பூங்காக்கள் ஊடாக பயணிக்கும் யாத்திரிகர்களுக்காக பாதுகாப்பை வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் வனப் பூங்கா மற்றும் வன விலங்குகளை புகைப்படம் எடுத்தல் மற்றும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு அனுமதி இல்லை என்றும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் எடுத்துச் இல்லாதிருக்குமாறும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாறசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பாறுக் ஷிஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நால்வர் அக்கரைப்பற்று...

பொத்துவிலில் மணல் அகழ்வு தடங்கல்களை தீர்க்க அரசாங்க அதிபர் உடனடி நடவடிக்கை

ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்....

சம்மாந்துறை பிரதேச சபையின் கன்னி அமர்வு

சம்மாந்துறை பிரதேச சபையின் 05வது சபையின் 01வது கூட்ட அமர்வு நடவடிக்கைகள்...

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.எச். முபாறக் ஓய்வு

இலங்கை பொலிஸ் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையும் நம்பிக்கையும் கொண்ட...