கிருஷ்ணகுமார்
ஓட்டமாவடி பகுதியில் புதன்கிழமை காலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் காயமடைந்த சம்பவம் வெளிப்பட்டுள்ளது.
இந்த விபத்து, கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஓட்டமாவடியைக் கடந்து செல்லும் போது நிகழ்ந்தது.
விபத்து நேரத்தில், பாதையை கடக்க முற்பட்ட நபர், வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மௌலவி ஒருவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காயமடைந்த அவர் ஆரம்பத்தில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஓட்டமாவடியில் புகையிரத விபத்து: மௌலவி ஒருவர் காயம்
Date: