கிருஷ்ணகுமார்
மஹோவிலிருந்து மட்டக்களப்புக்கு சென்ற ரயில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிரதான ரயில் நிலையத்திற்கு இன்று (26) பிற்பகல் 1 மணியளவில் பயணித்த ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
இதன் காரணமாக மட்டக்களப்பு பிரதான ரயில் நிலையத்திற்கான பயணங்கள் தடம்புரண்ட இடத்துக்கு அருகில் வரையில் நடைபெறும் என மட்டக்களப்பு நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
ரயில் தடம் புரண்டுள்ளதன் காரணமாக ரயில் நிலையத்திற்கு ரயிலை கொண்டுவரமுடியாத நிலை யேற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாளைய தினம் (27) சேவையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.