உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் கடமைக்காக பயிற்சி செயலமர்வு

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இடம் பெற்ற சிரேஸ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி செயலமர்வானது மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம்.சுபியான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த விடையங்கள் தொடர்பாகவும், தேர்தல்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக தெளிவூட்டப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கடமைக்காக இம்முறை 457 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கப்படவுள்ளதுடன் 144 வாக்கென்னும் நிலையங்களாக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கிருஷ்ணகுமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *