மரக்கறி விற்பனை போர்வையில் போதைப்பொருள் விற்பனை

மரக்கறி விற்பனை என்ற போர்வையில் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபர் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தற்காலிக மரக்கறி விற்பனை நிலையம் எனும் போர்வையில் சூட்சுமமாக போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் புதன்கிழமை (18) அன்று விசேட சோதனை நடவடிக்கை அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது குறித்த மரக்கறி விற்பனையில் ஈடுபட்டவர் தன்னை கைது செய்ய பொலிஸார் முயற்சிப்பதை கண்டு அருகில் உள்ள வயல்வெளிக்குள் தப்பி ஓடியுள்ளார். எனினும் புலனாய்வு பிரிவினரும் போலீஸ் அதிகாரிகளும் இணைந்து கடும் சிரமத்துடன் சந்தெக நபரை பின்தொடர்ந்து கைது செய்தனர்.

அத்துடன் குறித்த மரக்கறி விற்பனை செய்யும் கடையில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.எஸ். நிசாந்த வெதகே தலைமையில் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *