ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜீ மஹராஜ் மட்டக்களப்புக்கு வருகை

Date:

கிருஷ்ணகுமார்

உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் இராம கிருஸ்ண மிஷனின் துணைத்தலைவர் அதிவணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜீ மஹராஜ் வெள்ளிக்கிழமை (14) மட்டக்களப்புக்கு வருகைதந்தார்.

மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு வருகைதந்த அவரை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம், இராமகிருஸ்ண மிசன் பொதுமுகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் உட்பட சுவாமிகள், நூற்றாண்டு சபையினர் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து மட்டக்களப்பு கல்லடி மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகிலிருந்து சுவாமிக்கு மாபெரும் வரவேற்பு ஊர்வலம் நடைபெற்றது.

மாணவர்களின் கலை நிகழ்வுகள், சுவாமி விபுலானந்தா அழகில் கற்கைகள் நிறுவகத்தின் இனியம் இசைக்குழுவினர் இன்னிடையுடன் பெருமளவான மக்களினால் இந்த வரவேற்பளிக்கப்பட்டது.

கல்லடி இராம கிருஸ்ண மிசன் விரையில் இந்த வரவேற்பு ஊர்வலம் பிரமாண்டமுறையில் நடைபெற்றதுடன் வழியெங்கும் நிறைகுடங்கள் வைக்கப்பட்டு சுவாமிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.


இராமகிருஸ்ண மிசனில் உள்ள இராமகிருஸ்ணர் ஆலயத்தில் விசேட பூஜைகளிலும் கலந்துகொண்ட அவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

இந்த நிகழ்வில் இராம கிருஸ்ணமிசனின் சுவாமிகள் மற்றும் இராமகிருஸ்ண மிசன் நூற்றாண்டு சபையின் உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு நூற்றாண்டு தொடக்க விழாவுக்கு கலந்துகொள்வதற்காக உலகளாவிய இராமகிருஷ்ண மடம் மற்றும் இராம கிருஸ்ண மிஷனின் துணைத்தலைவர் அதிவணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜீ மஹராஜ் வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மாணவர்களை உள்ளீர்க்கும் செயற்பாடுகளில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை

கிருஷ்ணகுமார் பாடசாலையில் தரம் ஒன்றிற்கோ அல்லது தரம் ஆறாம் ஆண்டுக்கோ மாணவர்களை உள்ளீர்க்கும்...

குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 40 பேர் கைது

கிருஷ்ணகுமார் குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்ட 42 பேர் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய திடீர்...

மாடு திருடிய தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

கிருஷ்ணகுமார் மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவில் மாடுகளை திருடிய நபர் ஒருவர்...

கட்டாக்காலி மாடுகள் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை

பாறுக் ஷிஹான் இவ்விடயத்தை கடிதம் ஒன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளதுடன் இரவு நேரங்களில் பயணிக்கும்...