கிருஷ்ணகுமார்
மட்டக்களப்பு சிறையில் உள்ள கணவருக்கு ஐஸ் போதை பொருளை கொடுக்க முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது புதன்கிழமை (18) சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, ஓட்டுமாவடி 3 ம் பிரிவு உசேனியா வீதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டுமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த ஒரு மாத்துக்கு முன்னர் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் சம்பவதினமான இன்று பகல் 12.30 மணிக்கு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கணவரை பார்ப்பதற்காக உணவு மற்றும் பொயிலைகளை மனைவி எடுத்துச் சென்றுள்ளார்.
இந்தநிலையில் அவைகளை சிறைச்சாலை அதிகாரிகள் சோதனையிட்டபோது பொலிலைக்குள் சூட்சகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிராம் ஜஸ் போதை பொருளை மீட்டதுடன் அவரை சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணை அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.