மோட்டர் சைக்கிள்கள் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

Date:

மட்டு சந்திவெளி சந்தைக்கு முன் இடம்பெற்ற விபத்தில் திருமணமாகி 9 நாட்களேயான இளம் குடும்பஸ்தர் இன்று (18) உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சந்திவெளி பிரதான வீதியில் சந்தைக்கு முன்பாக இரண்டு மோட்டர் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து ஒன்று சம்பவித்திருக்கிறது.

இந்த விபத்தின் போது மோட்டார்சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சந்திவெளியை சேர்ந்த 27 வயதான வடிவேல் மோகன சாந்தன் எனும் இளைஞன் ஆவார். கடந்த 9 தினங்களுக்கு முன்தான் குறித்த இளைஞன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிக்கிய மற்றைய இளைஞனும் கை கால்களில் பலத்த காயத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமூக சேவை சார்ந்த செயற்பாடுகளில் சிறுவயது முதல் ஈடுபாடுள்ள இவ் இளைஞன் சந்திவெளியில் இன்று இரவு இடம்பெறவிருந்த கரப்பந்தாட்ட நிகழ்வில் கலந்துகொள்வோருக்காக வெதுப்பகம் ஒன்றில் உணவினை கொள்வனவு செய்ய வந்த போதே இந்த இளைஞன் விபத்தில் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்மாந்துறையில் வெசாக்தின அன்னதானம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ்...

சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் விசேட வெசாக்...

வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை துறைமுகத்தில் இன்று (13) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க...

மட்டக்களப்பு நகரில் வெசாக்தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இன்று மாலை பல்வேறு...