ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இளைஞனிடம் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞனை வெள்ளிக்கிழமை(23) இரவு கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 26 வயது மதிக்கத்தக்க 2 பிள்ளைகளின் தந்தையான மருதமுனை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 710 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் உட்பட சான்றுப்பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக பெரியநீலாவனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *