கேரளா கஞ்சாவுடன் இளைஞன் கைது

Date:

பாறுக் ஷிஹான்

கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இளைஞனை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று(3) இரவு அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலியார் வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் 26 வயது மதிக்கத்தக்க சந்தேக நபராவார்.

மேற்படி பகுதியில் அண்மைக்காலமாக  கேரளா கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் சந்தேக நபரிடம் இருந்து 1 மில்லி கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் மற்றும் சான்றுப் பொருட்கள் யாவும் நாளை (4) கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த கல்முனை தலைமையக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன் குறித்த சோதனை நடவடிக்கையானது கல்முனை பிராந்தியத்திற்கான   உதவி பொலிஸ் அத்தியட்ச௧ர் உதுமாலெவ்வை மஹ்மூத்கான் இப்னு அசாரின் வழிகாட்டலுக்கமைய கல்முனை தலைமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் ஆலோசனைக்கமைய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்மாந்துறையில் வெசாக்தின அன்னதானம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பொலிஸ்...

சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் வெசாக் தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் விசேட வெசாக்...

வாழைச்சேனையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

வாழைச்சேனை துறைமுகத்தில் இன்று (13) மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க...

மட்டக்களப்பு நகரில் வெசாக்தின நிகழ்வு

தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இன்று மாலை பல்வேறு...