ரயிலில் மோதுண்டு இளைஞர் பலி

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணியில் இன்று அதிகாலை ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 1.30மணிக்கு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச்சென்ற ரயில் மோதுண்டு கறுவப்பங்கேணி,அரோஸ் வீதியை சேர்ந்த எஸ்.நிசாந்தன் என்னும் 23வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

புகையிரத கடவையிலிருந்து தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தவரே இவ்வாறு ரயில் மோதுண்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

சடலத்தினை மோதிய ரயிலில் கொண்டு சென்று ஏறாவூர் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

கிருஷ்ணகுமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *