மோட்டார் சைக்கிள் விபத்தில் 25 வயதுடைய இளைஞன் பலி

மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுகுட்பட்ட முள்ளாமுனைப் பகுதியில் நேற்று (29) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 25 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சர்வோதைய நகர் கித்துள் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நடராசா ரஜிக்காந் என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ஆயித்தியமலை முள்ளாமுனை பிரதான வீதியால் மட்டக்களப்பு நோக்கிச் சென்ற வேளை முள்ளாமுனை பகுதியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தை ஏற்படுத்தியவர் தப்பிச் சென்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன் ஆயித்தியமலை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கிருஷ்ணகுமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *