மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழைபெய்துவருகின்றது.
இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை காணமுடிகின்றது.

பல இடங்களில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதையும் காணமுடிகின்றது.தொடர்ச்சியாக மழைபெய்யுமானால் சில பகுதிகளுக்கான போக்குவரத்துகளும் பாதிக்கப்படும் நிலைமைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேநேரம் கடந்த 11.11 2025 அன்று உருவான காற்றுச் சுழற்சி நகர்வதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கன மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இம்மழை எதிர்வரும் 20.11.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது. கனமழைக்கு வாய்ப்புள்ளதனால் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

முன்பள்ளிகளுக்கு நவம்பர் 30 ஆம் திகதி வரை பூட்டு

நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 30 ஆம் திகதி வரை...

தொல். திணைக்களத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்

மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தொல்பொருள் பதாகையை எதிர்வரும்...

அம்பாறை மாவட்ட புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி அம்பாறை மாவட்டத்திற்கு பொறுப்பான...

வெள்ள நீரால் பிடிக்கப்பட்ட அதிகளவான மீன்வகைகள்

அம்பாறை மாவட்டத்தில் பருவ மழை காரணமாக அங்குள்ள ஆறு குளம் ஆகியவற்றிலும்...