ஐஸ்,ஹெரோயின் போதைப் பொருட்களை விநியோகித்த நபர் கைது

Date:

நீண்டகாலமாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை சூட்சுமமாக விநியோகித்த சந்தேக நபரை அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இன்று அம்பாறை தலைமையக பொலிஸ் பிரதான பரிசோதகர் அசேல கே ஹேரத்தின் மேற்பார்வையின் கீழ் அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நடாத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் இச் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாடான துபாய் நாட்டில் இருந்து இயங்கும் போதைப்பொருள் கடத்தல் காரரின் தலைமையில் குறித்த கைதான சந்தேக நபர் செயல்பட்டு வருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

தற்போது கைதான சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் அறிவுறுத்தலின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பதில் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் குமாரவின் வழிகாட்டுதலின் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இராணுவ முகாம் காணி பொது மக்களிடம் கையளிப்பு

அம்பாறை காரைதீவு இராணுவ முகாம் அமைந்திருந்த காணி 35 வருடங்களின் பின்னர்...

சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

சர்வதேச உளநல தினம் இன்றாகும்.இதனை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணியும்...

கல்லோயா ஆற்றுப் பிரிவின் மகாபோகத்திற்கான ஆரம்ப கூட்டம்

கல்லோயா ஆற்றுப் பிரிவின் பெரும்போக நெற் செய்கையினை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான ஆரம்ப...

குருக்கள்மடம் புதைகுழி வழக்கு: 27ம் திகதிக்கு ஒத்திவைப்பு

மட்டக்களப்பு குருக்கள்மடம் புதைகுழி தொடர்பான வழக்கானது எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.குருக்கள்மடம்...